உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சோரியாங்குப்பத்தில் சாலை பணி துவக்கம்

சோரியாங்குப்பத்தில் சாலை பணி துவக்கம்

பாகூர்: சோரியாங்குப்பத்தில் ரூ.560 லட்சம் மதிப்பிலான சாலை மேம்பாட்டு பணியை, செந்தில்குமார் எம்.எல்.ஏ துவக்கி வைத்தார். பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில், எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், சோரியாங்குப்பம் ரோஜா நகரில் ரூ.5.60 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்க நிதி ஒதுக்க்பபட்டது. இதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. செந்தில்குமார் எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து இளநிலை பொறியாளர் ஐயப்பன் மற்றும் தி.மு.க., பிரமுகர்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை