உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வில்லியனுார் ஓட்டலில் உணவு பரிமாறும் ரோபோ

வில்லியனுார் ஓட்டலில் உணவு பரிமாறும் ரோபோ

புதுச்சேரியில் முதல் முறையாக தனியார் உணவகத்தில் ரோபோ உணவு பரிமாறும் சர்வீஸ் துவக்கப்பட்டுள்ளது.புதுச்சேரி வில்லியனுாரில் உள்ள அக் ஷரதா தனியார் ஓட்டல் ஒன்று, தங்களின் வாடிக்கையாளர்களுக்கு புதுவித அனுபவத்தை அளிக்க உணவு பரிமாறும் ரோபோ ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. சர்வரிடம் தேவையான உணவு ஆர்டர் கொடுத்தால், அடுத்த 5 நிமிடத்தில் ரோபோ ஒன்று உணவுகளை டேபிளுக்கு கொண்டு வருகிறது. அதனை சர்வர் நமக்கு பரிமாறுகிறார்.ரோபோ உணவு கொண்டு வருவது அங்கு சாப்பிட வரும் வாடிக்கையாளர்களுக்கு புதுமையான அனுபவத்துடன், ஆச்சர்யத்தை ஏற்படுத்தி வருகிறது. உணவக உரிமையாளர் கூறுகையில்; மும்பையில் இருந்து கொண்டுவரப்பட்ட இந்த ரோபோவில், ஜி.பி.எஸ்., கருவி பொருத்தப்பட்டு, ஓட்டலில் உள்ள உணவு விபரம், டேபிள்கள் எண்ணிக்கை குறித்த தகவல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.உணவு ஆர்டர் கொடுத்தால், 5 நிமிடத்தில் ரோபோ உணவை டேபிளுக்கு கொண்டு வரும். ஓட்டலுக்கு வரும் வாடிக்கையாளர் விபரங்களை ரோபோவில் பதிவிட்டால், அடுத்த முறை வரும்போது திருமண நாள், பிறந்த நாள் உள்ளிட்ட சிறப்பு நாட்களில் பாடல் ஒலிபரப்பி வாழ்த்துக்களை தெரிவிக்கும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ