உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனையில் ரோபோடிக் அறுவை சிகிச்சை செய்து சாதனை

ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனையில் ரோபோடிக் அறுவை சிகிச்சை செய்து சாதனை

புதுச்சேரி: ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனையில் 15க்கும் மேற்பட்டோருக்கு ரோபோடிக் அறுவை சிகிச்சைகள் செய்து சாதனை படைத்துள்ளனர். புதுச்சேரி, மூலக்குளம் ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனையில் துல்லியமான, குறைந்த காயத்துடன் ரோபோடிக் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது. இங்கு, டாக்டர் இ.சி., மூலம் அறுவை சிகிச்சை பெற்ற நோயாளிகள், குறைந்த வலி, குறைந்த ரத்த இழப்பு போன்ற பல்வேறு நன்மைகளை பெற்று வருகின்றனர். குறைந்த காயத்துடன் செய்யப்படும் அறுவை சிகிச்சை என்பதால் பெரும்பாலான மருத்துவக் காப்பீட்டு திட்டங்களில் பாலிசியின் விதிமுறைகளுக்கு உட்பட்டு வழங்கப்படுகிது. ெஹர்னியா அறுவை சிகிச்சை, பித்தப்பை, புரோஸ்டேட், பெருங்குடல், சிறுநீரக உட்பட பல்வேறு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகிறது. இதுகுறித்து, மருத்துவமனை இயக்குநர் வெங்கட்ராம் கூறுகையில், ‘மருத்துவமனையில் எங்கள் திறமையான அறுவை சிகிச்சை நிபுணர்களின் அனுபவமும், உலக தரம் வாய்ந்த துல்லியமான ரோபோடிக் தொழில்நுட்பத்துடன் ஒன்றிணைந்து, நோயாளிகளுக்கு பாதுகாப்பான சிகிச்சை, குறைந்த வலி மற்றும் விரைவான குணமடைதல் சிகிச்சையை வழங்கி வருகிறோம். மக்கள் வெளி மாநிலங்கள் மற்றும் பெரிய நகரங்களுக்கு செல்லாமல் உலக தரத்தில் இங்கு ரோபோடிக் அறுவை சிகிச்சை சேவை செய்யப்படுகிறது. வரும் காலத்தில் அதிநவீன ரோபோடிக் அறுவை சிகிச்சை சேவையை விரிவுப்படுத்தி நோயாளிகள் பயன்பெறும் வகையில் மருத்துவமனை திட்டமிட்டுள்ளது’ என்றார். அப்போது, மருத்துவமனை நிறுவனர் முருகேசன், டாக்டர்கள் சத்யவேணி, இந்து, ராஜன், கவுதம், சகிகலா, வாசுதேவன், ரெஹானா ஜெயராம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை