மேலும் செய்திகள்
குட்கா பொருட்கள் விற்பனை போலீசார் விசாரணை
05-Jun-2026
புதுச்சேரி: மேட்டுப்பாளையம் சந்திப்பில் விற்பனைக்காக வைத்திருந்த ரூ. 22 ஆயிரம் மதிப்பிலான குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேட்டுப்பாளையம் சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். மேட்டுப்பாளையம் சந்திப்பு அருகேயுள்ள டீ கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு விற்பதாக புகார் வந்தது. இதையடுத்து. போலீசார் அங்கு விரைந்து சென்று கடையை சோதனை செய்தபோது, அதில், ஹான்ஸ், கூல்லீப், சிகரெட் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனைக்கு வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 21 ஆயிரத்து 910 ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கடையின் உரிமையாளர்கள் முத்திரையர்பாளையம், காமராஜர் வீதியை சேர்ந்த வடிவேல், 60; கோட்டக்குப்பம், பெரிய தெருவைச் சேர்ந்த ஹாஜா மொய்தீன், 48; ஆகியோர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர். இதேபோல், சாரம், வெங்கடேஸ்வரா நகரில் உள்ள மளிகை கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ரூ. 2 ஆயிரம் மதிப்பிலான குட்கா பொருட்களை பறிமுதல் செய்த டி. நகர் போலீசார், கடை உரிமையாளர் ஜெயகணேஷ், 48, மீது வழக்குப் பதிந்து, கைது செய்தனர்.
05-Jun-2026