UPDATED : ஏப் 18, 2024 02:30 PM | ADDED : ஏப் 18, 2024 01:52 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் பைனான்சியர் முருகேசன் என்பவர் வீட்டில் இருந்து, ரூ.1 கோடி மதிப்புள்ள 2 ஆயிரம் நோட்டுகள் மற்றும் ரூ.2.60 கோடி மதிப்புள்ள 500 ரூபாய் நோட்டுகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவரது அலுவலகத்தில் நடந்த சோதனையிலும் ரூ.45 லட்சம் சிக்கியுள்ளது. புதுச்சேரி ஜான்சி நகரில் ஒரு வீட்டில் பணம் இருப்பதாக, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, ஜான்சி நகரில் பைனான்சியர் முருகேசன் என்பவர் வீட்டில் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தினர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=0u1evsun&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அப்போது, முருகேசன் என்பவர் வீட்டில் இருந்து, ரூ.1 கோடி மதிப்புள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மற்றும் ரூ.2.60 கோடி மதிப்புள்ள 500 ரூபாய் நோட்டுகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு முருகேசன் நெருக்கமானவர். அலுவலகத்திலும் சோதனை
முருகேசனின் வீட்டை தொடர்ந்து அவரது அலுவலகத்திலும் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அலுவலக மேஜை லாக்கரை திறந்து பார்த்தபோது அதில் ரூ.45 லட்சம் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதையும் அதிகாரிகள் கைப்பற்றினர். மொத்தம் முருகேசனிடம் இருந்து ரூ.4.05 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.