உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / 7 பேரிடம் ரூ. 5.27 லட்சம் அபேஸ் சைபர் கிரைம் கும்பலுக்கு வலை

7 பேரிடம் ரூ. 5.27 லட்சம் அபேஸ் சைபர் கிரைம் கும்பலுக்கு வலை

புதுச்சேரி : புதுச்சேரியில் 7 பேரிடம் பல்வேறு வகைகளில், 5.27 லட்சம் ரூபாய் மோசடி செய்த மர்ம நபர்களை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர்.புதுச்சேரி தட்டாஞ்சாவடியை சேர்ந்தவர் லட்சுமி. இவர் கிரெடிட் கார்டு விண்ணப்பித்து கார்டு வாங்கினார். இவரது மொபைல் எண்ணுக்கு குறுந்தகவல் வந்தது. அதில் ஒரு செயலியை பதிவிறக்கம் செய்து, கே.ஒ.சி., விபரங்களை பதிவிட வேண்டும் என, கூறப்பட்டிருந்தது. கார்டு மற்றும் ஓ.டி.பி. விபரங்களை பதிவு செய்தார். அடுத்த நிமிடத்தில், அவரது வங்கி கணக்கில் இருந்து 2.78 லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது.ரோடியார்பேட்டை பகுதியை சேர்ந்த வாசகன். இவர், மர்ம நபரின் வாட்ஸ் ஆப் குரூப்பில் இணைந்தார். அதில், குறைந்த விலைக்கு எல்.இ.டி., டி.வி., விற்பனைக்கு இருப்பதாக, விளம்பரத்தை பார்த்தார்.அதில், வந்த லிங்கை கிளிக் செய்து, டி.வி., ஆர்டர் செய்ய 36 ஆயிரம் ரூபாய் அனுப்பினார். பல நாட்கள் ஆகியும், டி.வி., வராமல் இருந்ததால், மோசடி கும்பல் ஏமாற்றியது தெரியவந்தது.சாரம் பகுதியை சேர்ந்த ராமன் 1.04 லட்சம், முத்தியால்பேட்டை மஞ்சுளாதேவி 46 ஆயிரம், புதுச்சேரி திருமுருகன், 17 ஆயிரம், முதலியார்பேட்டை ராஜ்குமார் 10 ஆயிரம், வெங்கட்டா நகர் முருகவேல், 36 ஆயிரம் ரூபாயை, மோசடி கும்பலிடம் ஏமாந்துள்ளனர்.இதுகுறித்த புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து, மோசடி கும்பலை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை