உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரியில் 7 பேரிடம் ரூ.77 ஆயிரம் அபேஸ்

புதுச்சேரியில் 7 பேரிடம் ரூ.77 ஆயிரம் அபேஸ்

புதுச்சேரி : புதுச்சேரியில் 7 பேர் ஆன்லைன் மோசடி கும்பலிடம் 77 ஆயிரம் ரூபாயை ஏமாந்துள்ளனர். முதலியார்பேட்டையை சேர்ந்தவர் நித்யா. இவரை 'வாட்ஸ் ஆப்' மூலம் தொடர்பு கொண்ட மர்மநபர் ஆன்லைன் பங்கு சந்தையில் முதலீடு செய்தால் அதிகம் பணம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதைநம்பிய நித்யா ரூ. 24 ஆயிரத்த 224 செலுத்தி, ஏமாந்தார். இதேபோல், சண்முகாபுரத்தை சேர்ந்த வித்யா ராம் 15 ஆயிரம் ஏமாந்தார். வில்லியனுாரை சேர்ந்த முருகன் என்பவருக்கு, தேசிய வங்கியின் பெயரில் வெகுமதி புள்ளிகளை மீட்டெடுப்பது தொடர்பாக குறுஞ்செய்தி வந்துள்ளது. அதை நம்பி முருகன், ஏ.டி.எம்., கார்டு விவரங்கள் மற்றும் ஓ.டி.பி., எண்ணை பகிர்ந்துள்ளார். அவரது வங்கி கணக்கில் இருந்து 15 ஆயிரம் எடுக்கப்பட்டது.கரியமாணிக்கம் தட்சிணாமூர்த்தி ஆன்லைனில் ரூ. 6 ஆயிரம் செலுத்தி நீர் மோட்டார் ஆர்டர் செய்தார். ஆனால், ஆர்டர் செய்த பொருள் குறிப்பிட நாட்களுக்குள் வராததால், ஆன்லைன் ஷாப்பிங்கை சோதனை செய்தபோது, போலியானது என்பது தெரியவந்தது.வாணரபேட்டையை சேர்ந்த புஷ்பவதி என்பவர் ஆன்லைனில் ரூ. 8 ஆயிரத்து 200 செலுத்தி துணிகள் ஆர்டர் செய்துள்ளார். ஆனால், அவர் ஆர்டர் செய்த துணிக்கு பதிலான போலியான துணிகள் டெலிவரி செய்யப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பாப்பான்சாவடி கணேஷ் 5,000, திருநள்ளாரை சேர்ந்த ஹரிகரன் 4,000 என, மொத்தம் 7 பேர் 77, 424 ரூபாயை மோசடி கும்பலிடம் இழந்துள்ளார். இதுகுறித்த புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை