உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / போதை விழிப்புணர்வு ஊர்வலம் பள்ளி மாணவர்கள் பங்கேற்பு

போதை விழிப்புணர்வு ஊர்வலம் பள்ளி மாணவர்கள் பங்கேற்பு

புதுச்சேரி: புதுச்சேரி கடற்கரை சாலையில் நடந்த போதை விழிப்புணர்வு ஊர்வலத்தில் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.ஜே.சி.ஐ., புதுச்சேரி மெட்ரோ மற்றும் திருக்கனுார், பிரைனி புளூம்ஸ் பள்ளி இணைந்து, போதை விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று காலை நடத்தியது. ஊர்வலத்தை காந்தி சிலை அருகில் சீனியர் போலீஸ் எஸ்.பி., கலைவாணன் துவக்கி வைத்தார்.இதில் ஜே.சி.ஐ., புதுச்சேரி மெட்ரோ தலைவி சிவசெல்வி தலைமை தாங்கினார். ஊர்வலத்தில் அமைப்பின் வார விழா தலைவர் சுந்தர வடிவேல் மற்றும் பிரைனி புளூம்ஸ் பள்ளி நிறுவனர் நாராயணசாமி முன்னிலை வகித்தனர்.ஊர்வலம் புஸ்சி வீதி வழியாக சென்று கம்பன் கலையரங்கில் நிறைவு பெற்றது. இதில், மெட்ரோ அமைப்பின் முன்னாள் தலைவர்கள், ஆசிரியர்கள், பள்ளி மாணவ - மாணவியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ