உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரசு பள்ளியில் அறிவியல் தின விழா 

அரசு பள்ளியில் அறிவியல் தின விழா 

திருக்கனுார் : வாதானுார் அன்னை சாரதா தேவி அரசு உயர்நிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தின விழா நடந்தது.தலைமை ஆசிரியர் வீரய்யன் தலைமை தாங்கினார். ஆசிரியை பார்வதி வரவேற்றார். தேசிய அறிவியல் தினம் குறித்துஅறிவியல் ஆசிரியர் பாலகுமார் நோக்கவுரையாற்றினார். அறிவியல் அறிஞர்களின் வாழ்க்கை வரலாற்றை, மாணவ, மாணவியர் நாடகம் மூலம் வெளிப்படுத்தினர். மாணவர்களிடையே வினாடி, வினா போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை ஆசிரியர்கள் செந்தமிழ் செல்வி, வேலவன், சங்கரி, பூவிழி, மலர்க்கொடி, சுஜாதா, குப்புசாமி, மகேஸ்வரி, சிவரஞ்சனி, சுமதி நிஷாந்தி செய்திருந்தனர்.ஆசிரியை ஓம் சாந்தி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை