உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சங்கர்ஸ் வித்யாலயா பள்ளி ஆண்டு விழா

சங்கர்ஸ் வித்யாலயா பள்ளி ஆண்டு விழா

வில்லியனுார் : சங்கர்ஸ் வித்யாலயா மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழாவில் சாதனை மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினர்.வில்லியனுார் சங்கர்ஸ் வித்யாலயா மேல்நிலைப் பள்ளி 40ம் ஆண்டு விழா திருக்காமீஸ்வரர் கோவில் வளாகத்தில் நடந்தது. விழாவிற்கு சங்கர்ஸ் வித்யாலயா கல்வி குழுமத்தின் தலைவர் சத்யகுமாரி கோவிந்தராஜன் தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் விஜயலட்சுமி மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் சரவணன் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் சுகந்தி வரவேற்று, ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினர்களாக மாநில நல்லாசிரியர்கள் விருது பெற்ற விவேகானந்தா அரசு மேல்நிலைப் பள்ளி வேதியியல் விரிவுரையாளர் முரளி மற்றும் புதுச்சேரி சவரிராயலு நாயக்கர் அரசு பெண்கள் பள்ளி ஆசிரியர் கஜலட்சுமி பங்கேற்று பள்ளியில் விளையாட்டு, கல்வி ஆகியவற்றில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினர். பள்ளி பெற்றோர் ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் சரஸ்வதி வாழ்த்துரை வழங்கினார். பள்ளி மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது.பள்ளி துணை முதல்வர் அஸ்வனியா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி