சின்ன மணிக்கூண்டு மேம்படுத்தும் பணி
புதுச்சேரி : உப்பளம் தொகுதியில் சின்ன மணிக்கூண்டை மேம்படுத்தும் பணியை, அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.புதுச்சேரி, உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட, சின்னக்கடையில் உள்ள சின்ன மணிக்கூண்டு, வரலாற்று பெருமை கொண்டது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள், அந்த மணிக்கூண்டு அருகில், புகைப்படம் எடுத்து கொள்வது வழக்கம்.இந்நிலையில், சின்ன மணிக்கூண்டை மேம்படுத்தும் பணியை தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 6.05 லட்சம் செலவில், அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., நேற்று துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் தி.மு.க., உப்பளம் தொகுதி செயலாளர் சக்திவேல், துணை செயலாளர் ராஜி, கிளை செயலாளர்கள் செல்வம், காளப்பன், சங்கர நாராயணன், விநாயகமூர்த்தி, ராகேஷ், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.