விவசாயிகளுக்கு மண் பரிசோதனை விளக்கம்
புதுச்சேரி : விவசாயிகளுக்கான மண் பரிசோதனை விளக்க கூட்டம், அமைச்சர் தேனீ ஜெயக்குமார் தலைமையில் நடந்தது.புதுச்சேரி விவசாய நிலங்களில் மண் தரம் ஆய்வு செய்யப்பட்டு, எந்த விதமான பயிர்களை பயிரிட வேண்டும் என்பது குறித்த, விழிப்புணர்வு விளக்கக் கூட்டம், திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோவில் வளாகத்தில் நடந்தது.அமைச்சர் தேனீ ஜெயக்குமார் தலைமை தாங்கினார். மண் பரிசோதனை நிபுணர்கள் பிரபு, ராமானுஜம் ஆகியோர் பரிசோதனை செய்யப்பட்ட மண் ணில், என்ன பயிர்கள் விளைவிக்கலாம், பயிர்களுக்கு எந்த மாதிரியான மருந்துகள் பயன்படுத்த வேண்டும் என, விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர்.புதுச்சேரி மற்றும் தமிழக பகுதிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று பயனடைந்தனர். பிரெஞ்சு துாதர் எட்டினே ரோலண்ட் பீஜு மற்றும் துணை தலைவர் டெல்பின் பெனாசி ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.