உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மண்ணாடிப்பட்டு கொம்யூனில் சிறப்பு துப்புரவுப் பணி துவக்கம்

மண்ணாடிப்பட்டு கொம்யூனில் சிறப்பு துப்புரவுப் பணி துவக்கம்

திருபுவனை : மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து முழுவதும் மேற்கொள்ளப்படவுள்ள சிறப்பு துப்புரவுப் பணியை ஆணையர் எழில்ராஜன் துவக்கி வைத்தார்.மத்திய அரசு மூலம் நாடு முழுவதும் சுவிச்சதா ஹி சேவா சிறப்பு தூய்மை பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் புதுச்சேரி உள்ளாட்சித் துறை வழிகாட்டுதல் படி மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தின் மூலம் சிறப்பு துப்புரவுப் பணி நேற்று துவங்கியது. திருபுவனையில் உள்ள மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் துவங்கிய சிறப்பு துப்புரவு பணிக்கான தனியார் வாகனங்கள், துப்புரவு பணியாளர்களின் ஊர்வலத்தை கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன் கொடியசைத்து துவக்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் உதவி பொறியாளர் மல்லிகார்ஜுனன், பணி மேற்பார்வையாளர் சச்சிதானந்தம், யு.டி.சி., வெங்கட்ராமன் மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து துப்புரவுபணியாளர்கள் கலந்துகொண்டனர்.திருபுவனை பழைய மருத்துவனை பகுதியில் தூய்மை பணிகளை துவக்கினர். நேற்று துவங்கிய சிறப்பு துப்புரவு பணி கொம்யூன் பஞ்சாயத்திற்குட்பட்ட அனைத்து கிராமங்களிலும் வரும் அக்.2ம் தேதிவரை மேற்கொள்ளப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ