மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி
புதுச்சேரி: புதுச்சேரியில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.ரோட்டரி கிளப் ஆப் புதுச்சேரி காஸ்மா சார்பில், ஆண்டுதோறும் மாற்றுத்திறனாளிகளை ஊக்கப்படுத்தும் வகையில், 'ஸ்டென்த் ஸ்போர்ட்ஸ் டே 2024' என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்தாண்டுக்கான விளையாட்டுப் போட்டி, கருவடிக்குப்பம், பாத்திமா பள்ளி வளாகத்தில் நடந்தது. இந்த போட்டியை அமைச்சர் லட்சுமி நாராயணன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.இதில் சிட்டிங் கிரிக்கெட், கபடி, ரிங் பால், வாலிபால், எறிபந்து உள்ளிட்ட ஆறு வகையான போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போட்டியில், புதுச்சேரியில் உள்ள மாற்றுத்திறனாளிகள், 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.இதில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, விருதுகளும் கோப்பைகளும் அளிக்கப்பட்டன. இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை ரோட்டரி கிளப் ஆப் புதுச்சேரி காஸ்மா சங்க தலைவர் ராஜேந்திரன், செயலாளர் சிவ கணபதி, ஒருங்கிணைப்பாளர் பாலாஜி, பழனிச்சாமி, துணைத் தலைவர் ஹாஜா முஹம்மது, பொருளாளர் சோபன் குப்தா, துணை ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரன் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.