உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாநில தடகள போட்டி மாணவிகள் பதக்கம் குவிப்பு

மாநில தடகள போட்டி மாணவிகள் பதக்கம் குவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் நடந்த மாநில அளவிலான தடகளப் போட்டியில், காட்டேரிக்குப்பம் ஸ்பீடு டிராக் ஸ்போர்ட்ஸ் சாரிடபுள் பண்டேஷன் டிரஸ்ட் வீரர்கள் பதக்கங்கள் குவித்தனர். பாண்டிச்சேரி அமைச்சூர் அத்லெட்டிக் அசோசியேசன் சார்பில் 39வது மாநில அளவிலான தடகளப் போட்டி உப்பளம், இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் நடந்தது. அதில், காட்டேரிக்குப்பம் ஸ்பீடு டிராக் ஸ்போர்ட்ஸ் சாரிடபிள் பவுண்டேஷன் டிரஸ்ட்டை சேர்ந்த மாணவர்கள் பல்வேறு பதக்கங்கள் பெற்று சாதித்துள்ளனர். 16 வயதிற்குட்பட்டோர் மகளிர் பிரிவில் மாணவி ராகவி 60 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல் மற்றும் மெட்லி ரிலே ஆகியவைகளில் தங்கம் வென்றார். மாணவி ஷிவாணி 80 மீட்டர் தடை தாண்டும் போட்டி, பென்டதலான் மற்றும் மெட்லி ரிலே ஆகிய போட்டிகளில் தங்கம் வென்றார். மாணவி அபிநயா 600 மீட்டர் ஓட்டம் போட்டியில் வெண்கலம், மெட்லி ரிலேவில் தங்கம் வென்றார். மாணவி சுவேதா 600 மீட்டர் ஓட்டம் போட்டியில் வெள்ளியும், மெட்லி ரிலேவில் தங்கமும் வென்றார். 14 வயதிற்குட்பட்டோர ்மகளிர் பிரிவில் மாணவி அஜிதா டிரையத்லான் போட்டியில் தங்கம் வென்றார். இதேபோட்டியில் மாணவி சஞ்சனி வெண்கலம் வென்றார். 12 வயதிற்குட்பட்டோர் பிரிவில் மாணவி வேதாஸ்ரீ 300 மீட்டர் ஓட்டம் போட்டியில் வெண்கலம் வென்றார். ஆண்கள் 14 வயதிற்குட்பட்டோர் பிரிவில் மாணவர் உதயநிதி ஈட்டி எறிதலில் வெண்கலம் வென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை