மேலும் செய்திகள்
கல்லுாரி மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம்
13-Aug-2024
புதுச்சேரி: உலக தற்கொலை தடுப்பு தினத்தையொட்டி, புதுச்சேரி உளவியல் நிறுவனம் சார்பில் சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலம் பாண்டி மெரினாவில் நடந்தது.லலிதாம்பிகை வரவேற்றார். ஆரோவில் பவுண் டேஷன் இயக்குனர் சொர்ணாம்பிகை, தேசிய மனநல புதுச்சேரி பொறுப்பு அதிகாரி பாலன், புதுச்சேரி சிறைத்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன், யுனிவர்சல் ஈகோ பவுண்டேஷன் நிறுவனர் பூபேஷ் குப்தா, புதுச்சேரி மகளிர் கருத்தரங்க அமைப்பின் தலைவர் ரேகனா பேகம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.சைக்கிள் ஊர்வலத்தில் பங்கேற்ற மாணவர்கள், இளைஞர்கள் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ராஜா, அருண் ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்ச்சியை கயல்விழி தொகுத்து வழங்கினார்.
13-Aug-2024