உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மீண்டும் குமாரை நியமிக்க ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

மீண்டும் குமாரை நியமிக்க ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

புதுச்சேரி: புதுச்சேரி கல்வித்துறைக்கு மீண்டும் முன்னாள் இயக்குனர் குமாரை நியமிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர். புதுச்சேரி பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை, காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது, உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து கல்வித்துறை மீது எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன. இதனை சமாளிக்க முடியாமல் ஆளுங்கட்சியினர் தவியாய், தவித்து வருகின்றனர். தற்போது அந்தமானில் இருந்து முன்னாள் கல்வித்துறை இயக்குனர் குமார் புதுச்சேரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். நிர்வாக திறமையுள்ள அதிகாரி என பெயரெடுத்த இவரை, மீண்டும் கல்வி துறையில் இயக்குனராக நியமிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் தரப்பில் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !