உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / விநாயகர் சதுர்த்தி தினத்தில் பிரசாரத்தை துவக்கிய காங்.,

விநாயகர் சதுர்த்தி தினத்தில் பிரசாரத்தை துவக்கிய காங்.,

புதுச்சேரி: விநாயகர் சதுர்த்தி விழாவில், புதுச்சேரி மின் கட்டணம் உயர்வு குறித்து காங்., சார்பில் வாட்ஸ் ஆப்பில் உலா வரும் போஸ்டர் கவனம் பெற்றுள்ளது.விநாயகர் சதுர்த்தி விழா நேற்று புதுச்சேரியில் கோலா கலமாக கொண்டாடப்பட்டது. அதையொட்டி வாக்காளர்களை குறி வைத்து விநாயகர் படத்துடன் பக்தர்களே கவலை வேண்டாம்.மின்சார கட்டணம் உயர்விலிருந்தும் மின்வாரியம் தனியார்மயம் ஆக்குவதிலிருந்தும் காப்பாற்றப்படுவீர்கள். 2026 -விரைவில், என, காங்., கொடி மற்றும் ஓட்டு போட்ட விரல் படம் கொண்ட போஸ்டர் ஒன்று வாட்ஸ் ஆப்பில் உலா வருகிறது. தற்போது புதுச்சேரியில் மின் துறை தனியார் மையம் மற்றும் மின் கட்டண உயர்வு குறித்து இண்டியா கூட்டணி போராட்டங்கள் நடத்தியதை தொடர்ந்து 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் பிரசாரத்தை விநாயகர் சதுர்த்தி தினத்தில் காங்., துவங்கிவிட்டது என, காங்., கட்சி யினர் கூறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ