உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கொத்தனாரை கத்தியால் குத்தியவர் கைது 

கொத்தனாரை கத்தியால் குத்தியவர் கைது 

புதுச்சேரி : கொத்தனாரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய நபரை போலீசார் கைது செய்தனர்.கடலுார் மாவட்டம் வடலுார் கல்குடியைச் சேர்ந்தவர் குணசேகரன் 55, கொத்தனார். இவர் கடந்த 8 மாதங்களுக்கு முன் வீட்டில் கோபித்துக் கொண்டு புதுச்சேரி முதலியார்பேட்டை தங்கி கொத்தனார் வேலை செய்து வருகிறார்.இவர் நேற்று காலை 10 மணிக்கு, புவனகிரியை சேர்ந்த செல்வம்,56; என்பவருடன் முதலியார்பேட்டையில் நடந்து சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, செல்வம், குணசேகரனிடம் குடிக்க பணம் கேட்டார். குணசேகரன் மறுக்கவே, ஆத்திரமடைந்த செல்வன் தான் வைத்திருந்த கத்தியால் குணசேகரன் கழுத்தி குத்திவிட்டு தப்பி சென்றார்.படுகாயமடைந்த குணசேகரன் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து செல்வத்தை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ