உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / திருக்குறள் வாழ்வியல் கருத்தரங்கம் 

திருக்குறள் வாழ்வியல் கருத்தரங்கம் 

பாகூர்: புதுச்சேரி நலப்பணிச் சங்கத்தின் சார்பில், திருக்குறள் வாழ்வியல் கருத்தரங்கம் நடந்தது.  சோரியங்குப்பம் முத்தமிழ்க் கூடல் இல்லத்தில் நடந்த கருத்தரங்கில், சங்கத்தின் மண்டல அமைப்பாளர் பவித்ரா வரவேற்றார். நிறுவனர் செல்வி முன்னிலை வகித்தார். தலைவர் நல்லாசிரியர் வெற்றிவேல் தலைமை தாங்கி,  திருக்குறளில் அறம், பொருள், இன்பம், வீடு, என்னும் தலைப்புகளில் சிறப்புரையாற்றினார். மருந்தாளுநர் கல்லுாரி மாணவி இசைமொழி நோக்கவுரையாற்றினார். மாணவிகள் வர்ஷா, பிரீத்தி, தமிழ்மொழி, திருக்குறளில் அறம் என்பது குறித்தும்,  மாணவர்கள் சித்தார்த் பத்மினிஷ், திருக்குறளில் பொருள் என்னும் தலைப்பிலும் கலந்துரையாடல் செய்தனர். மாணவிகள் ஹரிணி,  வரலட்சுமி,  ஞானஸ்ரீ,  காவியா, சந்தியா ஆகியோர் திருக்குறளில் இன்பம் என்பது குறித்தும், மாணவர்கள் ரோஹித்,  லோகேஷ், திருக்குறளில் வீடு என்னும் தலைப்பிலும் கருத்துரையாற்றினர். கருத்தரங்கில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் எழுது பொருள்கள் பரிசாக வழங்கப்பட்டன. மண்டல அமைப்பாளர் கேசவர்த்தினி நன்றி கூறினார்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை