உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தமிழ்ச்சங்கத்தில் திருக்குறள் கூறும் நிகழ்ச்சி

தமிழ்ச்சங்கத்தில் திருக்குறள் கூறும் நிகழ்ச்சி

புதுச்சேரி: புதுச்சேரி தமிழ்ச் சங்க வளாகத்தில் உள்ள திருவள்ளுவர்  சிலைக்கு மாலை அணிவித்து திருக்குறள் கூறும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.  நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவர் முத்து தலைமை தாங்கினார். செயலர் சீனு மோகன்தாசு வரவேற்றார். புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மோகன் பங்கேற்று திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து திருக்குறள் கூறும் நிகழ்வினை துவக்கி வைத்தார். தொடர்ந்து, தமிழறிஞர்கள், ஆர்வலர்கள், பொதுமக்களுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கினார்.  இதில், சங்கப் பொருளர் அருள் செல்வம், துணைத்தலைவர் திருநாவுக்கரசு, பேராசிரியர்கள் செல்வராஜ், பழனிவேல், பிரெஞ்சு பேராசிரியர் ஆனந்த வடிவேலு, பொறிஞர் பாலசுப்பிரமணியன், ஆட்சிக்குழு உறுப்பினர்கள் ராஜா, உசேன், சுரேஷ்குமார், சிவேந்திரன், ஆனந்தராசன், பாரதி, கலாம் விருட்சம் ராஜா, ரேகா, ஓவியர் சம்பத் நீசு, ஆடிட்டர் கோவிந்தராஜன், டாக்டர் தமிழ்வாணன், இளங்கோவன் மற்றும் திரளான மக்கள் கலந்து கொண்டனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !