மேலும் செய்திகள்
வில்லியனுார் கோவிலில் உறியடி உற்சவம்
28-Aug-2024
திருக்கனுார் : செட்டிப்பட்டு வரதராஜப் பெருமாள் கோவிலில் 5ம் ஆண்டு திருக்கல்யாண உற்சவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். திருக்கனுார் அடுத்த செட்டிப்பட்டு கிராமத்தில் 800 ஆண்டுகள் பழமையான ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது.இக்கோவிலில், 5ம் ஆண்டு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.இதையொட்டி, காலை 8:00 மணிக்கு விஷ்வக்சேன ஆராதனம், அக்னி பிரதிஷ்டை, மகா சுதர்ஷண ஹோமம், தன்வந்தரி ஹோமம், மகா லட்சுமி ஹோமம் நடந்தது. முக்கிய நிகழ்வாக, மாலை 5:00 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சர்வ பூஷன அலங்காரத்தில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் மற்றும் பொது மக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, பொதுமக்களுக்கு திருக்கல்யாண பூஜை பொருட்கள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
28-Aug-2024