உள்ளூர் செய்திகள்

பயிற்சி பட்டறை

பாகூர் : குருவிநத்தம் பாரதிதாசன் அரசு உயர்நிலைப் பள்ளியில்,'இயற்கையும் உணவும்' என்னும் தலைப்பில் பயிற்சிப் பட்டறையை நடத்தது.புதுச்சேரி கல்வித்துறை இளையோர் மற்றும் சுற்றுச்சூழல் இயக்கம், புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனம் இணைந்து நடத்திய பயிற்சிப் பட்டறையை,தலைமையாசிரியை கோமதி தொடங்கி வைத்தார்.இளையோர் மற்றும் சுற்றுச்சூழல் இயக்க ஒருங்கிணைப்பாளர் சங்கரதேவி வரவேற்றார். நல்லாசிரியர் வெற்றிவேல் நோக்கவுரையாற்றினார். மஞ்சு 'இயற்கை' மற்றும் பிரிட்டோ 'உணவு' என்ற தலைப்பிலும் கருத்துரையாற்றினர்.சிறப்பு விருந்தினராக புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் பிரெட்ரிக் லேண்டி,நிறுவன ஆய்வாளர் வெங்கட் சுப்ரமணியன் வாழ்த்தி பேசினர்.மாணவர்கள் தாமே தயாரித்துக் கொண்டு வந்த உணவு, தின்பண்டம், இனிப்புகளைப் பரிமாறிக்கொண்டனர். மேலும், கதை, இசை, மாய மந்திர நிகழ்ச்சிகளைத் தன்னார்வலர்கள் ஹரிபிரசாத், கவி, ஜோதி, கார்த்திக் உள்ளிட்டோர் நிகழ்த்தினர்.நிகழ்ச்சியில் 6 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். உடற்கல்வி ஆசிரியர் கமலக்கண்ணன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை