உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / காஞ்சிமாமுனிவர் பட்டமேற்படிப்பு மையத்தில் மரக்கன்று நடும் விழா

காஞ்சிமாமுனிவர் பட்டமேற்படிப்பு மையத்தில் மரக்கன்று நடும் விழா

 புதுச்சேரி: புதுச்சேரி காஞ்சிமாமுனிவர் அரசு பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், மரக்கன்று நடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. காஞ்சிமாமுனிவர் அரசு பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் இயற்கை வள மேம்பாட்டை வலியுறுத்தும் வகையில், ஒரு செடி, ஒரு உறுதிமொழி என்ற மரக்கன்று நடும் இயக்கத்தை நடத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று  ஏர்போர்ட் ரோட்டில்,  நேற்று மரம் நடும் விழா நடந்தது. நிறுவன இயக்குனர் சசிகாந்த்தாஸ் தலைமை தாங்கினார். கடலோர காவல் படையின், புதுச்சேரி மற்றும் தமிழக மாவட்ட கடலோர காவல்படை டி.ஐ.ஜி., சுரேந்திர சிங் தசிலா, என்.சி.சி., குழுமத் தளபதி கர்னல் அஷீஷ் திவாரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு  மரக் கன்றுகளை நட்டனர். தொடர்ந்து மனையியல் துறை சார்பில் மாம்பழ தின விழாவையொட்டி  மாம்பழங்கள் குறித்த சுவரொட்டிகள் வெளியிடப்பட்டது. நிகழ்ச்சியில், பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை