காட்டேரிக்குப்பம் ஸ்டேஷனில் மரக்கன்று நடும் விழா
புதுச்சேரி: காட்டேரிக்குப்பம் போலீஸ் சார்பில், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடும் விழா நடந்தது. விழாவிற்கு சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன் தலைமை தாங்கி, ஸ்டேஷன் வளாகத்தை சுற்றிலும் பல்வேறு வகையான பயன்தரக் கூடிய மரக்கன்றுகளை நட்டார். இதில் உதவி சப் இன்ஸ்பெக்டர்கள், தலைமை காவலர்கள் மற்றும் மகளிர் போலீசார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, காட்டேரிக்குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்புறங்களில் போலீசார் மூலம் பொது மக்களிடையே சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தியதுடன், பல்வேறு மரக்கன்றுகள் நடப்பட்டன.