உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சிறுமி பாலியல் பலாத்கார கொலை வழக்கு கைதான இருவர்  கோர்ட்டில் நேரில்  ஆஜர்

சிறுமி பாலியல் பலாத்கார கொலை வழக்கு கைதான இருவர்  கோர்ட்டில் நேரில்  ஆஜர்

புதுச்சேரி : புதுச்சேரியில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான இருவர், நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.புதுச்சேரியைச் சேர்ந்த 9 வயது சிறுமி கடந்த மார்ச் 2ம் தேதி மாயமானார். 3 நாட்கள் கழித்து, பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட நிலையில் சிறுமியின் உடல் மீட்கப்பட்டது. இதுதொடர்பாக சோலை நகர் காக்கா (எ) கருணாஸ், 19; அரிக்கிருஷ்ணன் (எ) விவேகானந்தன், 57; கைது செய்யப்பட்டனர். சீனியர் எஸ்.பி., கலைவாணன் தலைமையிலான சிறப்பு விசாரணை குழுவினர், விசாரித்து 76 சாட்சிகளை பதிவு செய்து, 572 பக்க குற்றப் பத்திரிக்கை போக்சோ விரைவு கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.சிறையில் உள்ள கருணாஸ், விவேகானந்தனை விசாரணைக்கு நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால் இருவரையும் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் வழக்கு விசாரணைக்கு ஆஜர்படுத்தினர். கடந்த மே 5ம் தேதி இருவருக்கும் குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டது.இந்நிலையில் சிறையில் இருந்த கருணாஸ், விவேகானந்தன் ஆகிய இருவரையும் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மதியம் 3:00 மணிக்கு, புதுச்சேரி போக்சோ விரைவு கோர்ட்டிற்கு அழைத்து வந்து நீதிபதி சுமதி முன் ஆஜர்படுத்தினர்.இருவரிடமும், குற்றச்சாட்டு பதிவு செய்த விபரம் தெரிவிக்கப்பட்டது. இருவரும் குற்றச்சாட்டை மறுத்தனர். அதனையொட்டி இவ்வழக்கின் விசாரணை வரும் 17ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.அன்று இருவர் மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்து, விசாரணை துவங்க உள்ளது. இவ்வழக்கில் கருணாஸ், விவேகானந்தன் சார்பில் ஆஜராக இலவச சட்ட உதவி மையம் மூலம் வழக்கறிஞர் நியமிக்கப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ