உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வில்லியனுார் கோவிலில் உறியடி உற்சவம்

வில்லியனுார் கோவிலில் உறியடி உற்சவம்

புதுச்சேரி : வில்லியனுார் வரதராஜப்பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு உறியடி உற்சவம் நேற்று நடந்தது.வில்லியனுாரில் பெருந்தேவித்தாயார் சமேத தென்கலை வரதராஜப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், கிருஷ்ண ஜெயந்தி உற்சவம் நேற்று முன்தினம் (26ம் தேதி) துவங்கியது. இதையொட்டி, சுவாமிக்கு இரவு 10:00 மணிக்கு திருமஞ்சனமும், 12:00 மணிக்கு அவதார உற்சவம் நடந்தது.தொடர்ந்து, நேற்று (27 ம் தேதி) காலை 8:00 மணிக்கு வெண்ணை தாழி கிருஷ்ணர் வீதியுலாவும், மாலை 6:00 மணிக்கு உறியடி உற்சவம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் மற்றும் பொது மக்கள் பங்கேற்றனர்.வரும் 4ம் தேதி காலை 10:00 மணிக்கு சிறப்பு திருமஞ்சனமும், மாலை 7:00 மணிக்கு சுவாமி ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி டாக்டர் சந்தானகிருஷ்ணன் மற்றும் உபயதாரர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை