உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / 27வது முறையாக சதம் அடித்த வெயில்

27வது முறையாக சதம் அடித்த வெயில்

புதுச்சேரி: புதுச்சேரியில் தொடர்ந்து அதிகரித்து வரும் வெயில் நேற்று 102 டிகிரியாக பதிவானதால், பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.  புதுச்சேரியில் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால், பொதுமக்கள் பகல் நேரத்தில் கடும் வெயில் காரணமாக வெளியே வருவதை தவிர்த்து வருகின்றனர்.  இந்நிலையில், நடப்பு கோடைக்காலத்தில் புதுச்சேரியில் நேற்று 102 டிகிரி பாரன்ஹிட் வெயில் பதிவானது. அதன் காரணமாக சாலைகளில் அனல் காற்று வீசியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.  இதன் மூலம் நேற்றுவுடன் சேர்ந்து இந்த ஆண்டு புதுச்சேரியில் 27வது முறையாக வெப்பம் சதம் அடித்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !