உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மக்கள் சுபிட்சமாக இருப்பதாக முதல்வர் நினைக்கிறார் வைத்திலிங்கம் எம்.பி., கிண்டல்

மக்கள் சுபிட்சமாக இருப்பதாக முதல்வர் நினைக்கிறார் வைத்திலிங்கம் எம்.பி., கிண்டல்

புதுச்சேரி : 'புதுச்சேரி மக்கள் தன்னை போல சுபிட்சமாக இருப்பதாக, முதல்வர் ரங்கசாமி நினைக்கிறார்' என, மாநில காங்., தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., பேசினார்.புதுச்சேரி மாநில காங்., சார்பில், மறைமலை அடிகள் சாலை, சுதேசி மில் அருகில், ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வலியுறுத்தி, நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., சீனியர் துணைத் தலைவர் தேவதாஸ், முன்னாள் அமைச்சர்கள் ஷாஜகான், கந்தசாமி, பெத்தபெருமாள், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பாலன், அனந்தராமன், கார்த்திகேயன், சிறப்பு அழைப்பாளர் வினோத், அயல்நாட்டு காங்., பிரிவின் பொதுச் செயலாளர் (ஐரோப்பா) முகமது இர்ஷாத் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர்.ஆர்ப்பாட்டத்திற்கு மாநில காங்., தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., தலைமை தாங்கி பேசியதாவது:நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி, இதன் விகிதாச்சாரப்படி, இட ஒதுக்கீடு அளிக்க காங்., வலியுறுத்துகிறது. ஆனால், பா.ஜ., அரசியல் அமைப்பு சட்டத்தையே மாற்றி, பட்டியலின மக்களின் இட ஒதுக்கீட்டை கூட எடுக்க நினைக்கின்றனர்.புதுச்சேரி மக்கள் தன்னை போல சுபிட்சமாக இருப்பதாக, முதல்வர் ரங்கசாமி நினைக்கிறார். புதுச்சேரி மக்கள் விலைவாசி உயர்வால் கடும் சிரமத்தை அனுபவித்து வருகின்றனர். இலவச அரிசி போடுவோம் என முதல்வர் கூறுகிறார். ஆனால் எப்படி தருவோம், எப்போது தருவோம் என, அவர் கூறவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை