உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ராஜிவ் மற்றும் இந்திரா சிக்னல்களை கடக்க வாகனங்கள் 30 நிமிடம் காத்திருக்கும் அவலம்

ராஜிவ் மற்றும் இந்திரா சிக்னல்களை கடக்க வாகனங்கள் 30 நிமிடம் காத்திருக்கும் அவலம்

புதுச்சேரி: புதுச்சேரி இந்திரா மற்றும் ராஜிவ் சிக்னலில் சிக்னல் விளக்குகள் சரிவர எரியாததால் வாகனங்கள் கடந்து செல்ல 30 நிமிடம் காத்திருக்கிறது.புதுச்சேரியில் நாளுக்கு நாள் வாகன நெரிசல் அதிகரித்து வருகிறது. அதனை சரிசெய்ய எந்தவித நடவடிக்கையும் எடுப்பது இல்லை. இந்நிலையில், நகரின் பிரதான சிக்னல்கள் ராஜீவ் மற்றும் இந்திரா சிக்னல்களில் பல சிக்னல் விளக்குகள் எரியவதில்லை. இதனால் வாகன ஓட்டிகள் தான் நிற்கும் சாலையின் எதிர்புறம் அல்லது பக்கவாட்டு சிக்னலில் எரியும் சிகப்பு, பச்சை விளக்குகளை கவனித்து சிக்னலை கடந்து செல்கின்றனர். இதனால் போக்குவரத்து மிகுந்த காலை மற்றும் மாலை நேரத்தில், ஒவ்வொரு சிக்னலிலும் 2 சுற்று சிக்னல் விளக்கு எரிந்த பின்பு வாகனங்கள் காத்திருந்து கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சிக்னலை கடக்க 15 நிமிடம் வாகனங்கள் காத்திருக்கிறது. இந்திரா சிக்னலை கடந்து செல்லும் வாகனங்கள் ராஜிவ் சிக்னலில் சிக்கி கொள்கிறது. அங்கு, 500 மீட்டர் நீளத்திற்கு நீண்ட வரிசையில் காத்திருக்கும் வாகனங்கள் 2 அல்லது 3 சுற்று சிக்னல்கள் சென்ற பிறகே சிக்னலை கடக்க முடிகிறது. இதனால் காலை, மாலை நேரத்தில் இரு சிக்னல்களை கடக்க வாகனங்களுக்கு 30 நிமிடம் ஆகிறது. எனவே, இரு சிக்னல்களிலும் பழுதாகி கிடக்கும் சிக்னல் விளக்குகளை சரிசெய்வதுடன், சாலையோரம் தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி