உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  தட்டாஞ்சாவடி தொகுதியில் தி.மு.க.,வேட்பாளர் ஓட்டு சேகரிப்பு

 தட்டாஞ்சாவடி தொகுதியில் தி.மு.க.,வேட்பாளர் ஓட்டு சேகரிப்பு

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சேது செல்வம், தி.மு.க., கொள்கை பரப்பு செயலாளர் ஜெகத்ரட்சகன் எம்.பி., மாநில அமைப்பாளர் சிவா தலைமையில் நேற்று பிரசாரத்தை தொடங்கினார். தட்டாஞ்சாவடி தொகுதி, புதுப்பேட்டை புத்துலாய் மாரியம்மன் கோவிலில் பூஜை செய்த பின், தி.மு.க., கொள்கை பரப்பு செயலாளர் ஜெகத்ரட்சகன், மாநில அமைப்பாளர் சிவா ஆகியோர் த லைமையில், வேட்பாளர் சேது செல்வம், தட்டாஞ்சாவடி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். பிரசார தொடக்க நிகழ்ச்சியில் தி.மு.க., அவைத் தலைவர் சிவக்குமார், மாநில துணை அமைப்பாளர்கள் அனிபால் கென்னடி, தைரியநாதன், எம்.எல்.ஏ.,க்கள்., செந்தில்குமார், விக்னேஷ் கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் தங்கவேலு, தொகுதி செயலாளர்கள் சக்திவேல் உள்ளிட்ட தி.மு.க., நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை