கணவருடன் பிரச்னை மனைவி தற்கொலை
புதுச்சேரி: புதிய வீடு வாங்குவது தொடர்பான பிரச்னையில், இளம்பெண் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சாரம் பாலாஜி நகரை சேர்ந்தவர் ராஜசேகர், இவர் தனது தாயுடன் கொசக்கடை வீதியில் சிறிய அளவில் நகை வைத்து தொழில் செய்து வருகிறார். கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன் ராஜசேகர் கடலுார் எஸ்.என்.,சாவடியை சேர்ந்த ஷீலாபிரபா,31; என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தம்பதிக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில், ராஜசேகர் தனது தாய் பெயரில் வீடு வாங்க ஷீலாபிரபாவிடம் நகைகளை கேட்டுள்ளார். அதற்கு அவர் தனது பெயரில் வீடு வாங்கினால் மட்டுமே நகைகளை தருவதாக தெரிவித்துள்ளார். இதில் இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது. விரக்தியடைந்த ஷீலாபிரபா நேற்று முன்தினம் வீட்டில் துப்பட்டாவால் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது தாய் விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில் டி நகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.