உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மயங்கி விழுந்து தொழிலாளி பலி

மயங்கி விழுந்து தொழிலாளி பலி

புதுச்சேரி: லாஸ்பேட்டை, புதுப்பேட், நடுத்தெருவை சேர்ந்தவர் முருகன், 57; கூலி தொழிலாளி. இவருக்கு அம்பிகா என்ற மனைவியும், ஒரு மகன், மகள் உள்ளனர்.  முருகன் நேற்று முன்தினம் காலை வீட்டில் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து, உறவினர்கள் முருகனை மீட்டு, சிகிச்சைக்காக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு, டாக்டர் பரிசோதித்து முருகன் இறந்து விட்டதை உறுதி செய்தார். புகாரின் பேரில், லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி