உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வேன் மோதி தொழிலாளி பலி

வேன் மோதி தொழிலாளி பலி

காரைக்கால்,: காரைக்காலில் வேன் மோதி கூலி தொழிலாளி இறந்தார்.காரைக்கால், திருப்பட்டினம், அபிராமி அம்மன் வடக்கு தெருவை சேர்ந்தவர் பழனிகுமார், 60; கூலி தொழிலாளி. இவரது மனைவி ஜெயந்தி. இரு பிள்ளைகள் உள்ளனர். நேற்று முன்தினம் பழனிகுமார் தனது பைக்கில் பட்டினச்சேரிக்கு சொந்தவேயைாக சென்றுவிட்டு பைபாஸ் வழியாக வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அதிவேகமாக வந்த லோடு வேன், மோதி பழனிகுமார் படு காயமடைந்தார். அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பழனிகுமார் இறந்தார்.விபத்து குறித்து திருப்பட்டினம் போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து, வேன் ஓட்டி வந்த மயிலாடுதுறை கூறைநாடு பகுதியை சேர்ந்த சேகர், 56, என்பவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை