உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இரண்டாம் உலக போர் இறுதி தினம் மலர் வளையம் வைத்து மரியாதை

இரண்டாம் உலக போர் இறுதி தினம் மலர் வளையம் வைத்து மரியாதை

காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் இரண்டாம் உலக போர் முடிவடைந்த நாளையொட்டி நேற்று பிரஞ்சி நினைவு சின்னத்தில் துணை துாதர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள பிரெஞ்சு நினைவு சின்னத்தில் இரண்டாவது உலகப் போர் முடிவடைந்து நினைவு நாள் உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது.இதனால் நேற்று பிரெஞ்சு நினைவு சின்னத்தில் துணைத் துாதர் ஜென் பிலிப் ஹூதர் மற்றும் துணை ஆட்சியர் செந்தில்நாதன் ஆகியோர்  தலைமையில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். மேலும் இருநாட்டு தேசிய கீதம் இசைத்து ,மவுனஅஞ்சலி செலுத்தினர்.பின் பிரஞ்சி குடியுரிமையுள்ளவர்கள் உறுதிமொழி எடுத்து நினைவு சின்னத்தில் மரியாதை செய்தனர்.பின் பிரஞ்சி பள்ளியில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை