உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கத்தியுடன் திரிந்த வாலிபர் கைது

கத்தியுடன் திரிந்த வாலிபர் கைது

புதுச்சேரி: கத்தியுடன் திரிந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.உருளையான்பேட் போலீசார் நேற்று மதியம் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். கடலுார் சாலையில் வாலிபர் ஒருவர் கத்தியுடன் திரிவதாக போலீசாசருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.போலீசாரை பார்த்ததும் அந்த வாலிபர் தப்பியோடினார். அவரை மடக்கி பிடித்து அவரிடம் இருந்த கத்தியை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர் உருளையான்பேட் 3வது தெருவைச் சேர்ந்த சிவா 35, என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை