உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பைக் திருடிய வாலிபர் கைது

பைக் திருடிய வாலிபர் கைது

புதுச்சேரி: பைக் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.வில்லினுார் உத்திரவாகினிப்பேட் பாரதி வீதியைச் சேர்ந்தவர் திருஞானசம்பந்தம், 45. இவர் நேற்று முன்தினம் காலை தனது பைக்கை ஒதியம்பட்டு மாத்திரை கம்பெனி எதிரில் நிறுத்திவிட்டு புல் அறுக்க சென்றார்.திரும்பி வந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை. இது குறித்த புகாரின் பேரில், வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். அவரது பைக்கை திருக்காஞ்சி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஏழுமலை, 25, என்பவர் திருடிச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை