உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / போக்சோ வழக்கில் ஜாமினில் வந்த வாலிபர் மீண்டும் கைது 

போக்சோ வழக்கில் ஜாமினில் வந்த வாலிபர் மீண்டும் கைது 

புதுச்சேரி: போக்சோ வழக்கில் கைதாகி ஜாமினில் வெளி வந்த வாலிபர், மீண்டும் கைது செய்யப்பட்டார்.  திருக்கனுார் அடுத்த சோம்பட்டை சேர்ந்தவர் பொன்னுசாமி மகன் மதன், 21; இவர் கடந்த 2025ம் ஆண்டு அருகாமை கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், திருக்கனுார் போலீசார், போக்சோ பிரிவில் மதனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தற்போது புதுச்சேரி போக்சோ கோர்ட்டில், நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஜாமினில் வெளியே வந்த மதன், மீண்டும் அதே சிறுமியை கடந்த ஏப்ரல் மாதம் கடத்தி சென்றார். இதுகுறித்து, சிறுமியின் தாய் அளித்த புகார் மீது திருக்கனுார் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் அவர், போக்சோ கோர்ட்டில், புகார் மனு அளித்தார். இதையடுத்து, நீதிபதி உத்தரவின்பேரில், திருக்கனுார் போலீசார் நேற்று முன்தினம் மதனை மீண்டும் போக்சோ பிரிவில் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை