உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / டார்லிங் ேஷாரூம்களில் 100 இன்ச் டிவி அறிமுகம்

டார்லிங் ேஷாரூம்களில் 100 இன்ச் டிவி அறிமுகம்

புதுச்சேரி: புதுச்சேரியில், முதல் முறையாக '100 இன்ச் டிவி' டார்லிங் ேஷா ரூம்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முன்னணி எலக்ட்ரானிக்ஸ், மொபைல் மற்றும் பர்னிச்சர் விற்பனை நிறுவனமான 'டார்லிங்', 'ஹையர்' நிறுவனத்தின் பிரம்மாண்டமான '100 இன்ச் டிவி' நேற்று புதுச்சேரி, ரெட்டியார்பாளையம் ேஷாரூமில் ஜெயக்குமார் நவின் தலைமையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த பிரத்யேக 'டிவி' டார்லிங்கின் தேர்ந்தெடுக்கப்பட்ட கிளைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. 'டால்பி விஷன்' மற்றும் 'டால்பி அட்மோஸ்' ஆகிய அதிநவீன தொழில் நுட்பங்களுடன் வெளியாகியுள்ள இந்த '100 இன்ச் டிவி', தியேட்டரில் பார்க்கும் அனுபவத்தை வீட்டிலேயே வழங்குகிறது. ரிமோட் இல்லாமல், செயற்கை நுண்ணறிவு மூலம் வாய்ஸ் அசிஸ்டன்ட் வழியாக உங்கள் குரலால் இந்த டிவியை இயக்க முடியும். மேலும், டிவி-யை ஹோம் வைபை உதவியோடு, வீட்டில் உள்ள ஹையர் நிறுவனத்தின் இதர இணைய வசதியுடன் கூடிய வீட்டு உபயோகப் பொருட்களை இயக்கவும் கட்டுப்படுத்தவும் முடியும். அறிமுகத்தை முன்னிட்டு, டார்லிங் வாடிக்கையாளர்களுக்கு எங்கும் கிடைக்காத சிறப்பு சலுகைகளை வழங்குகிறது: '100 இன்ச் டிவி' வாங்கும் வாடிக்கையாளருக்கு ரூ.69,999 மதிப்புள்ள எலக்ட்ரிக் டபுள் ரிக்லைனர் சோபா இலவசமாக வழங்கப்படுகிறது. மாத தவணை, ரூ.6,999ல் இருந்து தொடங்குகிறது. மேலும், குறிப்பிட்ட டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் ரூ. 25,000 வரை கேஷ்பேக் வசதியும் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ