உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  100 சதவீத ஓட்டுப்பதிவு; செல்பி கார்னர்

 100 சதவீத ஓட்டுப்பதிவு; செல்பி கார்னர்

புதுச்சேரி: புதுச்சேரி கடற்கரை சாலையில் தேர்தல் துறை மூலம் 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு செல்பி கார்னர் அமைக்கப்பட்டு உள்ளது. புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள லே கபே ஓட்டல் அருகே சட்டசபை தேர்தலை முன்னிட்டு தேர்தல் துறை மூலம் வாக்காளர் விழிப்புணர்வு பிரசாரத்தின் ஒரு பகுதியாக 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி செல்பி கார்னர் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த செல்பி கார்னரில் கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் திரளாக ஆர்வத்துடன் செல்பி எடுத்து வருகின்றனர். இதையொட்டி, பொதுமக்கள் செல்பி எடுப்பதுடன், அதனை மற்றவர்களுக்கு பகிர்ந்து,100 சதவீத ஓட்டுப்பதிவு செய்வதை உறுதிப்படுத்த வேண்டுமென மாவட்ட தேர்தல் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை