அரிச்சந்திரன் கோவிலில் நாளை 108 சங்காபிேஷகம்
புதுச்சேரி: கருவடிக்குப்பம் அரிச்சந்திரன் கோவிலில் நாளை 108 சங்காபிேஷகம் நடக்கிறது. புதுச்சேரி, கருவடிக்குப்பம் இடுகாட்டில் அமைந்துள்ள சந்திரமதி தாயார் உடனுரை அரிச்சந்திர சுவாமி கோவிலில் நாளை 24ம் தேதி காலை 9:30 மணிக்கு பரிகார தோஷங்கள் தீர்க்கும் மயான காளிக்கு கலசாபிேஷகம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. இதற்கான பூஜை இன்று மாலை 6:00 மணிக்கு புண்ணியாதனம் ேஹாமம், கணபதி ேஹாமத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து நவகிரக ேஹாமம், லட்சுமி ேஹாமம், ருத்திர ேஹாமம், பூர்ணாஹூதி, தீபாராதனை, அரிச்சந்திரன், சந்திரமதி, யோகிதாஸ் நித்திய பூஜை, இரவு 8:00 மணிக்கு மகா பைரவர் மற்றும் பைரவிக்கு வடுக பூஜை நடக்கிறது. நாளை 24ம் தேதி காலை 7:00 மணிக்கு கோ பூஜை, பஞ்சபூத பூஜை, மகா ஏகதச ருத்ரேஹாமம், ஸ்ரீமகா காளிக்கு மகா காளி ேஹாமம், 9:30 மணிக்கு மகா பூர்ணாஹூதி, தீபாராதனை நடக்கிறது. அதனைத் தொடர்ந்து காலை 10:00 மணிக்கு 108 சங்காபிேஷகம் மற்றும் தோஷங்கள் தீர்க்கும் பரிகார மயான காளிக்கு கலசாபிேஷகம், மகா தீபாராதனை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஆலய பரிபாலகர் ரவி, நிர்வாகிகள் ஸ்ரீநிவாசன், தினேஷ் ஆகியோர் செய்து வருகின்றனர்.