உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / 118 கிலோ மெகா சைஸ் லட்டு தயாரித்து பூஜை

118 கிலோ மெகா சைஸ் லட்டு தயாரித்து பூஜை

புதுச்சேரி: ரெயின்போ நகர் ஸ்வீட்ஸ் கடையில் விநாயகர் சதூர்த்தியையொட்டி,118 கிலோ லட்டு தயாரித்து வழிபாடு செய்தனர். புதுச்சேரி 45வது சாலை,ரெயின்போ நகர், பார்க் அருகில் ஸ்வீட்ஸ் கடை நடத்தி வருபவர் விக்ரம். இவர், கடந்த 2001ம் ஆண்டு முதல்விநாயகர் சதுார்த்தி விழாவிற்கு, பெரிய அளவில் லட்டு தயார் செய்து வழிபாடு செய்து வருகிறார். இந்நிலையில், விநாயகர் சதுார்த்தியையொட்டி, நேற்று தனது கடையில், 118 கிலோமெகா சைஸ் லட்டு தயார் செய்து, அதற்கு சிறப்பு பூஜை மற்றும் ஹோமம் நடத்தினார். இந்த லட்டை, கடந்த 3 நாட்களாக 7 நபர்கள் சேர்ந்து தயாரித்துள்ளனர். பொதுமக்கள் லட்டை பார்வையிட்டு சென்றனர். இந்த லட்டு வரும் 30ம் தேதி,பிரசாதமாக பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை