உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இளநிலை எழுத்தர் பணிக்கு 19 பேர் தேர்வு

இளநிலை எழுத்தர் பணிக்கு 19 பேர் தேர்வு

முதல்வர் ரங்கசாமி பணி ஆணை வழங்கல் புதுச்சேரி: எல்.டி.சி. பணிக்கு தேர்வான 19 நபர்களுக்கு முதல்வர் ரங்கசாமி பணி ஆணை வழங்கினார். புதுச்சேரி பணியாளர் மற்றும் நிர்வாக சீர்த்திருத்த துறை சார்பில் இளநிலை எழுத்தர் (எல்.டி.சி.,) நேரடி நியமனத்திற்கான எழுத்து தேர்வு கடந்த ஆக. 27 ம் தேதி நடந்தது. இத்தேர்வில் 157 பேர்களில் இதுவரை 151 பேருக்கு பணி ஆணை வழங்கப் பட்டுள்ளது.இவர்களில் 131 நபர்கள் பணியில் சேர்ந்துள்ளனர். மீதமுள்ள காலி பணியிடங்களுக்கு காத்திருப்போர் பட்டியலில் இருந்து 19 நபர்கள் (10 ஆண்கள், 9 பெண்கள்) தேர்வு செய்து பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.சட்டசபையில் முதல்வர் ரங்கசாமி, பணி ஆணைகளை வழங்கி வாழ்த்தினார். சபாநாயகர் செல்வம், வேளாண் துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார், அரசு கொறடா ஆறுமுகம், ரமேஷ் எம்.எல்.ஏ., பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை சார்பு செயலர் ஜெய்சங்கர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை