உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வாலிபரை தாக்கிய 2 பேர் கைது

வாலிபரை தாக்கிய 2 பேர் கைது

புதுச்சேரி : தேங்காய்திட்டு, புதுநகரை சேர்ந்தவர் தீபக், 20;பட்டதாரி. இவர், மாணவி ஒருவரை காதலித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை காதலியை தேடி அவரது வீட்டிற்கு சென்றார். அங்கு வந்த அன்புராஜ் மற்றும் அவரது நண்பர்கள் குருசுக்குப்பம் ஸ்டீபன்ராஜ் கவ், ஜான்சன், ஒதியம்பட்டு டேனியல் (எ) எத்திராஜ் ஆகியோர் தீபக்கை அழைத்து சென்று, அவரை சவுக்கு கட்டை, மட்டையால் சரமாரி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். படு காயமடைந்த தீபக்கை அங்கிருந்தவர்கள் மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் அளித்த புகாரின் பேரில், முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து அன்புராஜ், 24, ஸ்டீபன் ராஜ் கவ் 23, ஆகியோரை கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி