உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  சீர்திருத்தப் பள்ளியில் இருந்து தப்பிய 2 சிறுவர்கள் மீட்பு

 சீர்திருத்தப் பள்ளியில் இருந்து தப்பிய 2 சிறுவர்கள் மீட்பு

அரியாங்குப்பம்: பள்ளி சிறுமியை வீட்டில் அடைத்து வைத்து பாலியல் ரீதியாக துன்புறுத்திய வழக்கில், பாகூர் போலீசார், கடந்த மாதம் பாகூர் பகுதியை சேர்ந்த வாலிபர் ஆகாஷ், 18, என்பரை போக்சோ வழக்கில் கைது செய்து, சிறையில் அடைத்தனர். மேலும், இவ்வழக்கில் தொடர்புடையே அதே பகுதியை சேர்ந்த 17 வயது டைய 2 சிறுவர்களை, அரியாங்குப்பம் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர். இந்நிலையில், அங்கு தங்கியிருந்த 2 சிறுவர்களும், சிறுவர் சீர்த்திருப் பள்ளி செக்யூரிட்டி அறை யில் இருந்த ஆஷா பிளேடை எடுத்து, ஜன்னல் கம்பியை அறுத்து கொண்டு, நேற்று அதிகாலை தப்பி சென்றனர். இதுகுறித்து, புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து, அவர்களை தேடிவந்தனர். இந்நிலையில், நேற்று மாலை பாகூரில் பதுங்கி ருந்த சிறுவர்களை போலீசார் மீட்டனர். அவர்கள் மீண்டும் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டனர் .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை