மேலும் செய்திகள்
பேனர் வைத்தவர் மீது புகார்
27-Jun-2025
அரியாங்குப்பம்: காணாமல் போன2 மூதாட்டிகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.தவளக்குப்பம் அடுத்த டி.என்., பாளையத்தை சேர்ந்தவர் வரதராசு மனைவி அஞ்சலை, 85. இவர், கடந்த ஜனவரி 3ம் தேதி, வீட்டில் இருந்து வெளியில் சென்றவர், திரும்பி வரவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்க வில்லை. இதுகுறித்து, தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.திருவண்ணாமலை மாவட்டம், சேத்பட் அடுத்த ஆவியான்தாங்கள் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மனைவி எல்லம்மாள், 70. இவர் கடந்த 8ம் தேதி, புதுச்சேரி, கடற்கரைக்கு உறவினர்களுடன் வந்தவர், காணாமல் போனார். இதுகுறித்து, புகாரின் பேரில், ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
27-Jun-2025