உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  தீ விபத்தில் 2 வீடுகள் எரிந்து சேதம் சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு

 தீ விபத்தில் 2 வீடுகள் எரிந்து சேதம் சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு

பாகூர்: சோரியாங்குப்பத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு வீடுகள் எரிந்து சேதமானது. பாகூர் அடுத்த சோரியாங்குப்பம், திடீர்குப்பம் பகுதியை சேர்ந்தவர் கன்னியம்மாள், 50; கூலி தொழிலாளி. இரும்பு தகரம் போட்ட வீட்டில் வசித்து வருகிறார். இவர் நேற்று காலை வீட்டில் விளக்கு ஏற்றி வைத்து விட்டு வெளியே சென்றார். அப்போது, எதிர்பாராத விதமாக விளக்கில் இருந்து தீப்பொறி பரவி வீடு தீ பிடித்து எரிந்தது. அருகில் உள்ள அவரது உறவினர் ஏழுமலை, 35; என்பவரது வீட்டிற்கும் தீ பரவியது. அப்போது, கன்னியமாளின் வீட்டில் இருந்த காஸ் சிலிண்டர் பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது. தகவலறிந்த பாகூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இருவரது வீட்டினுள் இருந்து அனைத்து பொருட்களும் எரிந்து சாம்பலாகின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை