பெண்ணையாற்றில் 2 லட்சம் கன அடி நீர்வரத்து
புதுச்சேரி: பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர் தீனதயாளன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சாத்தனூர் அணைகட்டிலிருந்து வினாடிக்கு 76,000 கன அடி தண்ணீர் திறந்தாலும், பெண்ணையாறு நீர்பிடிப்பு பகுதியிலிருந்து மேலும் 1,24,000 கன அடி தண்ணீர் என மொத்தமாக வினாடிக்கு இரண்டு லட்சம் கனஅடி தண்ணீர் பெண்ணையாறில் வருகின்றது.இதனால், புதுச்சேரி கிராம புற பகுதியான கொம்மந்தான்மேடு, பெரிய ஆராய்ச்சிக்குப்பம், மணமேடு, கரையாம்புத்தூர், கடுவனூர், பாகூர், பரிக்கல்பட்டு, சோரியாங்குப்பம், குருவிநத்தம், ஆகிய பகுதிகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது. இக்கிராமங்களில் தாழ்வான பகுதியில் உள்ள மக்களை அரசுக்கு சொந்தமான கட்டடங்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நீர் பிடிப்பு பகுதிகளில் தற்போது மழை குறைந்து இருப்பதால் ஆற்றில் செல்லும் தண்ணீர் குறைய வாய்ப்புள்ளது.