மேலும் செய்திகள்
கஞ்சா விற்ற இருவர் கைது
09-Oct-2025
கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர் கைது
25-Oct-2025
புதுச்சேரி: கத்தியுடன் திரிந்த இரு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட, அய்யங்குட்டிப்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே மர்ம நபர்கள் கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், மேட்டுப்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அங்கு போலீசாரை பார்த்ததும் இருவர் தப்பியோட முயன்றனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து, விசாரித்தனர். அவர்கள் முத்திரையர்பாளையம் சந்தோஷ் (எ) பூபாலன், 19; தர்மபுரி சதீஷ், 19, என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மீது போலீசார் ஆயுத சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்த கத்தியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
09-Oct-2025
25-Oct-2025