குட்கா விற்ற 2 பேர் கைது
புதுச்சேரி : மாகி அருகே தடைசெய்யப்பட்ட புகையிலை போதை பொருட்களான, குட்கா, பான்மசாலா ஆகியவற்றை விற்பதாக மாகி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் நேற்று அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். போலீசாரை கண்டதும், இருவர் பைக்கில் தப்பி செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து, விசாரித்தனர். அவர்கள், கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த ரஷீத், 33, கண்ணுாரை சேர்ந்த சம்சீர், 42, ஆகியோர் என்பது தெரியவந்தது.அவர்களிடமிருந்து 72 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, இரண்டு பேரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.